11 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை…. காதலனை கரம் பிடித்த இளம்பெண்… கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்..!!!!

கேரளாவில் 11 ஆண்டுகால ரகசிய வாழ்க்கைக்கு பின் இளம்பெண் ஒருவர் தன் காதலரை கரம் பிடித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கில்லி பட பாணியில் தன் காதலியை தன் அறைக்குள்ளேயே 11 ஆண்டு காலமாக ரகசியமாக மறைத்து வைத்து வாழ்ந்து வந்துள்ளார் ஒரு இளைஞர். இதுகுறித்த தகவல் பின்வருமாறு, கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அய்யலூரை சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திடீரென்று மாயமானார். இதனை தொடர்ந்து எங்கு தேடியும் சஜிதா குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதனால் வேலாயுதம் நென்மரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சஜிதா அப்பகுதியில் உள்ள ரகுமான் என்பவரை காதலித்து வந்ததும் அவருடன் பல ஆண்டுகளாக ஒரே அறையில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. ரகுமான் வேலைக்கு செல்லும்போது சஜிதாவை தன் அறையில் வைத்து பூட்டி சென்று வந்துள்ளார், இந்நிலையில் அந்த ஜனவரி மாதம் ரஹ்மானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரகுமான் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது சகோதரர் பாலக்காடு நெம்மாரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ரகுமான் சகோதரர், ரகுமான் ஒரு இளம் பெண்ணோடு அருகே உள்ள கிராமத்தில் தனியாக வாழ்ந்து வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் போலீசார் நடத்திய விசாரணையில் ரகுமான் தன் காதலி சஜிதா உடன் 11 ஆண்டு காலமாக ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஒப்படைத்து, அதைத்தொடர்ந்து நீதிபதியிடம் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியதால், ரகுமான் சுஜிதா இருவரும் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நெம்மாரா சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் காவல்துறையினர் இருவரையும் கோர்ட்டில் ஒப்படைத்தனர். அங்கு நீதிபதியிடம் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்த நிலையில் ரகுமான் சுஜிதா இருவரும் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதைத்தொடர்ந்து நெம்மாரா சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவரது திருமணத்தில் கலந்து கொண்ட நெம்மாரா தொகுதி எம்எல்ஏ பாபு தம்பதிகளை வாழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *