“இது இருந்தால் படிக்க மாட்டான்” பெற்றோர் செய்த செயல்…. பின் நடந்த சம்பவம்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் ரங்கராஜ்-உமாமகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிகேஷ் தனது செல்போனில் அடிக்கடி விளையாடி கொண்டிருந்ததை அவரது பெற்றோர் பார்த்துள்ளனர். இதனால் தங்களது மகன் படிக்க மாட்டான் என நினைத்த பெற்றோர் நிகேஷின் செல்போனை வாங்கி கொண்டனர்.

இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த நிகேஷ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *