நாளை வெளியாகிறது 10-ம் வகுப்பு ரிசல்ட்…

 நாளை 10-ம் வகுப்பு தேர்வுமுடிவு வெளியிடப்படவுள்ளது .

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது . நாளை காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என்று  அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

exam result க்கான பட முடிவு

மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் மே 2ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வேண்டுவோர் மே 6ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மே 2 முதல் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் , தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 14 முதல் 22 வரை சிறப்பு துணைப்பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது .