10-ஆம் வகுப்பு மாணவன் “உலக சாதனை” 6.51 வினாடிகளில் 302 யோகாசனங்கள்….!!

விருதுநகரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன், 6.51 வினாடிகளில் 302 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்திருக்கிறார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன். இவர் சிறு வயது முதலே யோகாசன கலையை முறையாக பயிற்ச்சி பெற்று வருகிறார். தாம் கற்ற கலையில் எப்படியாவது உலக சாதனை புரிய வேண்டும் என்ற லச்சியத்தோடு இருந்த பாலவேலன், அதற்கான பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்காட்ஸ் நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் முன்னிலையில், குறைந்த நிமிடத்தில் அதாவது 6 நிமிடம் 51 விநாடிகளில் 302 ஆசனங்களை செய்து முடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சான்று பெற உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.