ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு அதிகரித்து வரும் நீர்வரத்தால் அணையின் நீர்மட்டம் 82.4 அடியை எட்டியுள்ளது.
கடந்த ஐந்தாம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் பலத்த மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் அணைக்கு வந்து சேரும் பவானி மற்றும் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதன் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1,08,038 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 82.4 அடியாகவும், நீர் இருப்பு 15.8 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 205 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.