“108 கிலோ தங்கம் பறிமுதல்” தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு….!!

பறிமுதல் செய்யப்பட்ட 108 கிலோ தங்க நகைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்தது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உரிய ஆவணம் இல்லாமலால் கொண்டு செல்லும் பணத்தை முதலிய பொருட்களை கை பற்றி வருகின்றனர்.

கிலோ தங்கம்" க்கான பட முடிவு

அந்த வகையில் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் காவல்துறையினர் வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தூத்துக்குடி நகரில் தபால் தந்தி அலுவலகம் அருகே  வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 108 கிலோ தங்கம் சிக்கியது. நகைக்கடைகளில் வினியோகம் செய்ய கர்நாடகாவில் இருந்து தங்கம் கொண்டுவரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிகின்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க்கான பட முடிவு

இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள்  வாகனத்தை பறிமுதல் செய்து தூத்துக்குடி  மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். தூத்துக்குடி மாவட்ட அதிகாரி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரடியாக நகை கொண்டு வரப்பட்ட வாகனத்தை ஆய்வு செய்தார். மேலும் அந்த வாகனத்தில் இருந்து வந்தவர்கள் யார் யார் முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா என்று தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். நகையை எடுத்து வந்த வாகனத்தை ஒட்டிய ட்ரைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது.