“விடுதலை படத்தின் ரிலீஸ் எப்ப தெரியுமா…?” வெளியான பட அப்டேட்..!!!!

“விடுதலை” திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் “விடுதலை” திரைப்படத்தில் சூரி கதாநாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தெலுங்கு, தமிழ், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராகவும், சூரி போலீசாகவும் நடிக்கின்றனர்.

அதோடு மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கின்றது. இத்திரைப்படம் வருகின்ற 31-ம் தேதி தியேட்டரில் ரிலீசாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கின்றார்கள்.