திருவொற்றியூர் ஆர்.கே.நகர் இந்திரா நகரைச் சேர்ந்த 102 வயதான மல்லய்யா, பி.எஸ்.என்.எல்.லில் இருந்து ஓய்வு பெற்று கடந்த 32 ஆண்டுகளாக ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்தார். பணம் எடுக்க புதிய பாலம் அருகே உள்ள ஏடிஎம்-க்கு சென்றார்.
அப்போது வயது முதிர்ந்ததால் ஏடிஎம்-ல் உள்ள ஏசி கம்பிரசர் ஸ்டாண்டில் கைபட்டதில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் குடும்பத்தினர் துக்கத்தில் ஆழ்ந்து உள்ளனர்.