மாஸ்.! சூர்யா 42 குறித்து வெளியான சூப்பர் அப்டேட்… வெயிட்டிங்கில் ரசிகாஸ்..!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகின்றார் . இந்த திரைப்படத்தில் பாலிவுட் ஹீரோயின் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கின்றார். மேலும் படத்தை யூவி கிரேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கின்றது. இத்திரைப்படம் குறித்த அப்டேட் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது புது அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதன்படி இத்திரைப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. மேலும் படத்தை கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியிட பட குழு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.