“கிடைச்சத இழக்கிறதும், இழந்தது கிடைக்கிறதும்…” சோகமாக பதிவிட்ட விக்கி..!!!

தமிழ் உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருந்தார். இதற்காக விக்னேஷ் சிவன் காத்திருந்த நிலையில் இதுகுறித்த அறிவிப்பு நீண்ட காலத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன்பின் திடீரென அதிர்ச்சியூட்டும் வகையில் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின் ஏ கே 62 திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் அஜித் கூட்டணியில் ஏகே 62 திரைப்படம் உருவாக இருப்பதாக சொல்லி ஒரு வருடம் ஆகி உள்ளது. இதனால் விக்னேஷ் சிவன் இணையதள பக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற பாடலை பகிர்ந்து சோகமாக பதிவிட்டு இருக்கின்றார்.