தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்குகின்றார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு கலையரங்கத்தில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு புது உத்வேகத்துடன் பேசி இருக்கின்றார்.
அவர் பேசியுள்ளதாவது, இந்த விழாவில் நான் அழுது விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் வந்தேன். இனிமேல் சோக சீன் எல்லாம் கிடையாது. சந்தோஷமான சீன் தான். நான் கஷ்டப்படும் போது எனக்கு ஆதரவாக இருந்ததும் என்னை தூக்கி விட்டதும் ரசிகர்களாகிய நீங்கள் மட்டும் தான். இப்போ நான் திரும்பி வந்துட்டேன். ஆகையால் இனிமேல் சமூக வலைதளங்களில் மற்றவர்களுடன் சண்டை போட வேண்டாம். இனிமே அமைதியாக இருந்து நான் என்ன செய்கிறேன் மட்டும் பாருங்க. இனி நான் உங்களை ஏமாற்ற மாட்டேன் என புத்துணர்ச்சி உடன் பேசி உள்ளார்.