சிம்பு தற்போது ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை க்ரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜா தயாரித்திருக்கின்றார். படத்தில் சிம்புவுடன் சேர்ந்து கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள் . படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் வருகின்ற 30ஆம் தேதி தியேட்டரில் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இதனால் தீவிரமாக படக்குழு ப்ரொடெக்ஷன் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு தொடக்கி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகின்றது. மேலும் படக்குழு இரவு 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என போஸ்டர் மூலம் அறிவித்திருந்தது. அதன்படி படக்குழு டிரைலரை வெளியிட்டுள்ளார்கள்.
Time to watch the #PathuThalaTrailer on LOOP now ! ❤️🔥
Click play here 🔥 ➡️ https://t.co/QFAwt8P1oP@StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman @nameis_krishna #PathuThalaFromMarch30 #PathuThala pic.twitter.com/8lGyPEmwb5
— Sony Music South (@SonyMusicSouth) March 18, 2023