1 நிமிஷத்திற்கு 5 லட்சம்… மாப்பிள்ளையிடம் ஒப்பந்தம் போட்ட ஹன்சிகாவின் அம்மா..!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா சென்ற டிசம்பர் நான்காம் தேதி தொழிலதிபர் சோகைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 450 வருட பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் இருக்கும் முண்டோட்டோ கோட்டையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றார்கள். இந்த நிலையில் ஹன்சிகாவின் திருமணம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் சென்ற பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகி இருக்கின்றது.

ஹன்சிகாவும் அவரின் தாயும் சென்ற காலத்தில் நடந்த பிரச்சனைகள் குறித்தும் அதை சமாளிக்க அவர்கள் எடுத்த முடிவுகள் என பல ரகசியங்கள் குறித்து பேசி இருக்கின்றார். ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின் அண்மைய எபிசோடில் ஹன்சிகாவின் தாய் மணமகன் குடும்பத்தினரிடம் நிமிடத்திற்கு ரூபாய் 5 லட்சம் கேட்டதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஹன்சிகாவின் அம்மா மணமகனின் அம்மாவை அழைத்து விழாக்களுக்கு தாமதமாக வருவது குறித்து புகார் செய்திருக்கின்றார். அது என்னவென்றால் நீங்கள் தாமதமாக வந்தால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வைப்பதாக தெரிவித்து இருக்கின்றார்.

Leave a Reply