வந்தியத்தேவனாக கார்த்தி உருவானது எப்படி..? முதல் பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட்..!!!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சென்ற வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசானது. இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் என பலர்  நடித்திருந்தார்கள்.

தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதால் பட குழு  தற்போது தீவிரமாக பணியில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் வந்திய தேவன் வேடத்தில் கார்த்தி நடித்திருக்கும் நிலையில் தோற்றம் வடிவமைக்கப்பட்ட வீடியோவை பட குழு வெளியிட்டு இருக்கின்றார்கள். மேலும் அதில் முதல் பாடலான அகநக பாடல் வருகின்ற 20-ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகும் என்பதையும் பட குழு தெரிவித்து இருக்கின்றது.