நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடிய பிரபுதேவா… வைரலாகும் வீடியோ..!!

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் சென்ற வருடம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களையும் வசூல் சாதனையும் செய்தது. இந்த நிலையில் அண்மையில் நடந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

இதற்கு பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் சோசியல் மீடியாவில் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் பிரபுதேவா தனது நடன கலைஞர்களுடன் சேர்ந்து நாட்டு நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கின்றார். மேலும் அந்த வீடியோவை தனது twitter பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

 

Leave a Reply