துன்புறுத்துபவர்களை பழி தீர்க்கத்தான் இந்த கெட்ட வார்த்தை.. பிக்கிலி பாடல் ரிலீஸ்..!!!

இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பிரபல நடிகராக உருவெடுத்தார். இந்த திரைப்படம் சென்ற 2016ம் வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்கியும் வருகின்றார்.

அண்மையில் இத்திரைப்படத்தின் ஸ்னீக் காட்சி வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. அதன்படி பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தில் இடம்பெற்ற பிக்கிலி கதாப்பாத்திரத்தை ரசிகர்களுக்கு போஸ்டர் மூலம் விஜய் ஆண்டனி அறிமுகப்படுத்தி இருக்கின்றார். அந்த பதிவில், நண்பா! இவன்தான் பிக்கிலி. கொஞ்சம் கவலப்படுங்க, முடிஞ்சா பயப்புடுங்க. இவனப்பத்தி நாளைக்கி மாலை 4 மணிக்கி (17 ம் தேதி ) , பிக்கிலி பாடல்-ல இன்னும் நிறைய சொல்றேன் என்று பதிவிட்டிருந்தார்.

அதன்படி இப்படத்தின் முதல் பாடலை விஜய் ஆண்டனி நேற்று (17 தேதி) வெளியிட்டுள்ளார். அந்த பாடலின் தொடக்கத்தில் பேசும் விஜய் ஆண்டனி தமிழில் புதிய கெட்ட வார்த்தையை கண்டுபிடித்து விட்டேன். சமூகத்தில் மற்றவர்களை அடக்குபவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை தங்கள் சுயநல செயல்களால் துன்புறுத்துபவர்களை பழி தீர்க்கதான் இந்த கெட்ட வார்த்தை உருவாக்கபட்டுள்ளது என பிக்கிலி என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply