லைலாவை தொடர்ந்து ஹாரர் திரில்லர் படத்தில் இணைந்த சிம்ரன்… போஸ்டரை வெளியிட்ட சப்தம் பட குழு..!!!

லட்சுமி மேனன் தற்போது சப்தம் என்ற திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அறிவழகன் இயக்கி தயாரிக்கின்றார். மேலும் படத்தில் ஹீரோவாக ஆதி நடிக்கின்றார். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படத்தில் நடிகை லைலா இணைந்திருக்கின்றார்.

அவரின் கதாபாத்திரம் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் எனவும் மிக அழுத்தமான கதாபாத்திரமாக இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது படத்தில் சிம்ரன் இணைந்திருப்பதாக நடிகர் ஆதி போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருக்கின்றார். படத்தில் தொடர்ந்து முன்னணி நடிகைகள் இணைந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

Leave a Reply