நடிகை சமந்தாவிற்கு இரண்டாம் திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய அளவில் உச்ச நடிகைகளாக திகழ்பவர்களில் ஒருவர் தான் நடிகை சமந்தா. சமந்தாவிற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவுடன் திருமணம் நடந்தது. இவர்களது திருமண வாழ்க்கை சந்தோசமாக சென்று கொண்டிருந்த நிலையில் நான்கு ஆண்டுகள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

நடிகை சமந்தா விவாகரத்திற்கு பிறகு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று தற்போது தான் தேறி வருகிறார். இந்த நிலையில் தான் சமந்தா இரண்டாவது திருமணம் செய்ய போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. அந்த தகவலின் படி சத்குரு ஆலோசனைப்படி தான் தனது இரண்டாவது திருமணம் கழிக்க சமந்தா யோசித்து வருவதாகவும் விரைவில் அவர் தனது முடிவை அறிவிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.