10,11,12-ம் வகுப்பு மாணவர்களே நாளை முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 1-ம் தேதி ஆரம்பித்து மே-31 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 10 மற்றும் 11 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *