10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை?…. அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு சம்பவம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஒழுங்கு படுத்தும் வகையிலும், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களிலும், துணை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரி ஓதியன் சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடற்கரை சாலை பகுதியில் காவல்துறை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வில்லியனூர் ஆச்சார்யா பள்ளி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த காவல் கண்காணிப்பு மையத்தின் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் கேமரா காட்சிகள் திரையில் தெரியும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று காவல் கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்தார். அந்த விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்துடனும், கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக கடற்கரைச் சாலையில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதுவையில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இதுவரை 60 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட உடன் 10 ,11,12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மூடுவது குறித்து விரைவில் முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *