ஏர்டெல் நிறுவனம் புதிய பைபர் சேவையை தொடங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி இலவசமாக வழங்குகிறது.
பைபர் அதிவேக இன்டர்நெட் சேவையை பிஎஸ்என்எல் முதன்முதலாக தொடங்கி வைத்தது. அது பொதுமக்கள் மத்தியில் அதீத வரவேற்ப்பை பெற அதனை தொடர்ந்து ஜியோ புதிய பைபர் சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்தது. அதன்படி செப்டம்பர் 5 முதல் ஜியோ பைபர் சேவை தொடங்க உள்ளதாகவும் அதனுடன் இன்டர்நெட் மட்டுமல்லாமல் டிவி லேண்ட்லைன் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜியோவின் இந்த அதிரடி சேவையை பார்த்தவுடன் பலர் முன்பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் இதற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது அதில், ஏர்டெல் v-பைபர் bradband சேவை திட்டங்களின் கீழ் பயனர்கள் 6 மாதத்திற்கு 1000 ஜிபி வரையிலான இலவச டேட்டாவை பெறுவார்கள் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ரூபாய் 799,1099,699,1999 உள்ளிட்ட திட்டங்களின் கீழ் இப்போது சேவை கிடைக்கப் பெறுகிறது. இந்த ஒரே அறிவிப்பில் ஜியோ ஃபைப்ரே விழுங்கி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.