ரூ 10,00,000 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…திருப்பூர் அருகே பரபரப்பு …!!

வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்தன.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அகலரப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் டபுளிங் நூற்பாலை நடத்தி வருகிறார். இவரது நூற்பாலையில் குறைந்த எண்ணிக்கையில்லே  தொழிலாளர்களே வேலை பார்த்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நூற்பாலைக்கு வெளியே டபுளிங் செய்த நூல் கோன்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் நூற்பாலைக்குள் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று நூல்கோன்களில் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென்று அனைத்து இடங்களிலும் வேகமாக பரவியது. உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர்  தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் . பின்னர் தண்ணீரை பாய்த்து  தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூல்கோன்கள் எரிந்து நாசம் ஆனது. தீ விபத்துக்கு காரணம்எதுவும் தெரியவில்லை. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.