சூறைக்காற்றால் சரிந்த 10,000க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சரிவு !!..சோகத்தில் விவசாயிகள் …

பலத்த சூறைக்காற்றின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்ககளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த திண்ணமங்கலம் கோவிலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் வாழை மரங்களை பயிரிட்டுள்ளனர் . இன்னும் சில காலங்களில் அறுவடை செய்யும் நிலைக்கு வாழை மரங்கள் தழைத்து வளர்ந்து நின்று உள்ளனர்.

இதனையடுத்து நேற்றைய தினம் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது இந்த காற்றின் அடர்த்தியை தாங்க முடியாத  10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

இதன்பின் தோட்டத்திற்கு நேரில் சென்று கண்ட விவசாயிகள் வாழை மரங்கள் சரிந்து அதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதனர் . இது குறித்து அவர்கள் கண்ணீர் மல்க பேசியுள்ளனர் அவர்கள் பேசியதாவது இந்த முறை பருவமழை எங்களுக்கு பயனளிக்கவில்லை ஆகையால் பணம் கொடுத்து லாரிகளில் தண்ணீர் வரவழைத்து வாழை மரங்களுக்கு ஊற்றி காப்பாற்றி வந்தோம் .

அனைத்தையும் வீணாக்கும் படி இந்த சூறாவளி காற்றானது நாசம் செய்து போய்விட்டது இனி வருமானத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்று  தெரியவில்லை என்று பேசியுள்ளனர் மேலும்  வேளாண்மைத் துறை அதிகாரிகள் இந்த பேரிடர் நிகழ்வை பார்வையிட்டு இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்