மெட்டா நிறுவனம் அதிரடியாக பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு பத்தாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. மெட்டா நிறுவனம் இறுதி கட்ட பணி நீக்க பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த முறை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் தளத்தில் பணி நீக்க தகவல்கள் குறித்து பதிவிட்டு வருகின்றனர். சுமார் 10,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரியேட்டர் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர் தெரிவித்துள்ளார். செலவினங்களை குறைக்கும் நோக்கில் இந்த கடின முடிவை எடுக்கும் சூழல் உருவாகிவிட்டது என்று மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.