15 நல வாரியங்களின் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி – தமிழக அரசு அரசாணை!

15 நல வாரியங்களின் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸால் அணைத்து தொழில்களும் முடங்கப்பட்டுள்ள நிலையில், 15 நலவாரிய தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட 15 நல வாரிய உறுப்பினர்கள் பயன்பெறுவர் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 600கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்., 14ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வரும் நிலையில், ஏப்ரல் 30 வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை என நேற்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே அனைத்து ரேஷன் கடை தாரர்களுக்கும் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது.

கடன்களுக்கான இ.எம்.ஐ மற்றும் வட்டி உள்ளிட்டவை அடுத்த 3 மாதங்களுக்கு வசூலிக்கப்படாது. கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட சலுகைகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *