தமிழகத்தில் ரூ.1000 உரிமைத் தொகை யாருக்கெல்லாம்…? குழப்பத்தில் குடும்ப தலைவிகள்…!!!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக சுமார் ரூ.7000 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் நிபந்தனைகள் அடிப்படையில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அரசாணைகள் இதுவரை வெளியாகவில்லை.

தற்போதைய தகவலின்படி பார்த்தால் அரசின் மற்ற உதவித்தொகை திட்டங்களின் பயனடைபவர்கள் அதாவது முதியோர் பென்ஷன் உதவி தொகை, விதவை பென்ஷன் போன்ற திட்ட பயணர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ.1000 உரிமை தொகை கிடைக்காது என கூறப்படுகிறது. மேலும் இது போன்ற தகவல்கள் குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நமக்கு உரிமை தொகை கிடைக்குமா இல்லையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply