1000 பேருக்கு தன் அறக்கட்டளை சார்பில்…. நீங்க நிஜத்திலும் ஹீரோ தான் சார்…. குவியும் பாராட்டு….!!!!

நடிகர் சோனு சூட் தனது அறக்கட்டளை சார்பாக ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக மிதிவண்டி வழங்கியுள்ளார்.

ரசிகர்களால் ரியல் ஹீரோ என்று அழைக்கப்படுபவர் நடிகர் சோனு சூட். இவர் எங்கு பேரிடர் நடந்தாலும் முதல் ஆளாக உதவிக்கு வந்து நிற்பார். இந்நிலையில் இவர் தனது தங்கை மாளவிகாவுடன் சேர்ந்து அறக்கட்டளை மூலம் பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் முன்கள பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் உட்பட சுமார் ஆயிரம் பேருக்கு இலவச மிதிவண்டி வழங்கியுள்ளார்.

தனது சொந்த ஊரான பஞ்சாப் மாநிலம் மோகாவைச் சேர்ந்த 1000 இளம் பெண்களுக்கு இலவசமாக மிதிவண்டி வழங்கியுள்ளார். இந்த செயலால் 40 கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பயனடைந்துள்ளனர். இதில் 8 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகளும் அடங்குவர். இந்த செயலால் நடிகர் சோனு சூட் டை அவரது ரசிகர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.