1000பேர் போதாது…! இன்னும் ஆட்கள் எடுங்க… 535பேரை கூடுதலாக நியமித்த தமிழக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையை பொருத்தவரை சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஏற்கனவே நந்தம்பாக்கத்தில் 950 படுக்கைகளுடன் ஆன கொரோனா நல மையம், ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், தண்டையார்பேட்டை தொற்று மருத்துவமனை ஆகிய இடங்களில் ஒரு 700 படுக்கைகள் என்கின்ற வகையில் இந்த கொரோனா நல மையங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

இதுமட்டுமல்லாது 2000 படுக்கைகளை அத்திப்பட்டு என்கின்ற இடத்தில்  வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் தங்க வைப்பதற்கான, அந்த ஏற்பாட்டையும் செய்யப்பட்டிருக்கிறது. அது இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனாலும் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்ற இந்த நந்தனம் டிரேட் சென்டர் பொருத்தவரை 950 படுகைகளில் அரசு அலுவலர்கள், குறிப்பாக காவல் துறையை சேர்ந்தவர்கள், முன்கள பணியாளர்களாக இருப்பவர்களுக்கு தொற்று ஏற்படுகின்றபோது அவர்களுக்கு என்று ஒரு தனியாக ஒரு நல மையம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது.

அந்த வகையில் இப்போது நந்தனம் ட்ரேட் சென்டரில் 350 படுகைகள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் காவல் துறையினருக்கு என்று பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.காவல்துறையினரை பொருத்தவரை ஏற்கனவே காவல்துறை மருத்துவமனையில் 100 படுகைகளை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் நிர்வகித்து கொண்டிருக்கிறது. கூடுதலாக இப்போது 350 படுகைகள் இங்கே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த 350 படுகைகள் மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு பிரத்தியேக அமைப்பாக இது செயல்படும் என்று தொடங்கப்பட்டிருக்கிறது.

முன்கள பணியாளர்களாக இருக்கின்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நம்முடைய அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் 100 படுக்கைகள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு என்று தனியே இருந்துகொண்டிருக்கிறது. சென்னையை பொருத்தவரை நம்முடைய மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஏற்கனவே வட்டத்திற்கு 5 பேர் களப்பணியாளர்கள் என்று நியமித்தார்கள். இந்த 5 பேர் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கும், அவர்களை கண்காணிப்பதற்கும் அந்த பணிகளை தொடர்ந்து செய்து வந்தார்கள்.

இந்தநிலையில் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஆணையர் அவர்கள் இன்னும் கூடுதலாக இப்பொழுது நேற்றிலிருந்து சிறப்பு மருத்துவ வசதி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தொற்று என்று கண்டறியபட்ட உடன் உடனடியாக அவர்களுக்கு அந்த மருந்து வசதிகளை மாநகராட்சி நேரடியாக களப்பணியாளர்கள் மூலம் கொடுப்பது என்கின்ற வகையில், ஜிங்க், பாராசிட்டமால், விட்டமின் சி போன்ற மருந்துகளை அவர்களுக்கு தருகின்ற பணியினை நேற்றைக்கு தொடங்கியிருக்கிறார்கள்.

தொடங்கப்பட்ட பணிக்கு புதிதாக பணியாளர்கள் வேண்டும் என்கின்ற வகையில் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் இன்னுமொரு 535 பேரை பணியில் அமர்த்திக் கொள்ள உத்தரவிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே இருக்கின்ற 1,000 களப்பணியாளர்களோடு இந்த 535 புது களப்பணியாளர்கள்  நியமித்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *