100 சதவீதம் வாக்குப்பதிவு… மாற்றுத்திறனாளிகள் பேரணி…!!

மாற்றுத்திறனாளிகள்  சார்பில் 100 சதவீதம் வாக்களிபதற்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியரால்  துவங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் அருகே  மாற்றுத்திறனாளிகள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடந்தது. இந்த பேரணியில் வருகிற  18ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும்  தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம்  நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

Image result for வாக்குப்பதிவு

மேலும் இதனை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனங்களிலும், நடை பேரணியாகவும்  100 சதவீதம் வாக்கு இந்தியர்களின் பெருமை, மாற்றுத்திறனாளியின் வாக்கு முதல்வாக்கு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதில் அனைவரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம்  நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை  கேட்டு கொண்டார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன், பார்வையற்றோர் நலச்சங்க நிர்வாகி ராஜூ மேலும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.