100 ஆண்டுகள் பழமையான கோவில்… புனிதத்தன்மையை சேதமாக்கிய மர்ம கும்பல்…!!!

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோவிலின் புரனமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

100 ஆண்டுகள் பழமையா இந்து கோவில் ஒன்று பாகிஸ்தான் உள்ள பஞ்சாப் ராவல்பிண்டில் உள்ளது . அந்தக் கோவிலுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக புரனமைப்பு நடந்து வருவதால் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு தினசரி நடைபெறும் பூஜைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மர்ம நபர்கள் சிலர் அந்த பழமையான கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து கோவிலை சூறையாடியது மட்டுமன்றி மேல்தளத்தில் உள்ள கடைகளையும் அடித்து நொறுக்கி மாடிப்படிகளையும் இடித்து விட்டுச் சென்றுள்ளனர்.

இதனை அறிந்து  கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் கோவிலில் அத்துமீறி நுழைந்து அதன்  புனிதத்தன்மையை சேதபடுத்தியவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர. ஆகையால் இதுபோன்ற நாச வேலையில் ஈடுபட்டவர்களை போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவில் புரனமைப்பிற்கு முன்பு கோவிலை சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்பு நிலங்கள் இருந்ததாகவும் அதனை மாவட்ட நிர்வாகங்கள் அகற்றி விட்டதாகவும் அதனால் ஆக்கிரமிப்பு கும்பலைச் சேர்ந்தவர்கள் எவராவது இந்த தீய செயலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரித்து வருகின்றனர்.