
தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷால் மற்றும் சந்தானம் இணைந்து நடித்த சுந்தர் சி இயக்கிய திரைப்படம் தான் மதகஜராஜா. 12 வருடங்களுக்கு முன்பு எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் கடந்த 12ம் தேதி தான் திரையரங்குகளில் வெளியானது.
ஆரம்பம் முதல் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மதகஜராஜா படம் வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனரான சுந்தர் சி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது பேசிய அவர் படத்திற்கு வந்த விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பார்த்து தான் இரண்டு நாட்களாக கண்களில் கண்ணீருடன் இருந்ததாக கூறியுள்ளார்.
அதோடு நூற்றுக்கு நூறு சதவீதம் பாசிட்டிவ்வான கருத்துக்களை பெற்ற படம் என்றால் அது மதகஜராஜா தான் என்று கூறியுள்ளார். மேலும் 12 வருடங்கள் கழித்து இந்த படம் திரைக்கு வருவதற்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் சுந்தர் சி நன்றி தெரிவித்துள்ளார்.