100% வாக்களிக்க வேண்டும்…! நாட்டுப்புற பாடல்கள் பாடி… பெரம்பலூரில் விழிப்புணர்வு பிரச்சாரம்..!!

பெரம்பலூரில் நாட்டுப்புற பாடல் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் கொரானா அச்சுறுத்தலால் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும், 100% வாக்களிப்பது குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் நாட்டுப்புற பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நாட்டுப்புற பாடல்களை பாடி பிரச்சாரம் செய்தனர்.

மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரீவெங்கடபிரியா இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த பிரச்சாரம் தொடங்கியது. இதையடுத்து பெரம்பலூர்-குன்னம் தொகுதிகளில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அரசு கேபிள் டி.வி. உதவியாளர் இந்துமதி, தாசில்தார் நூர்ஜகான் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.