உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ராம் ஜானகி கோவிலில் இருந்து 100 வருடம் பழமை வாய்ந்த சிலை திருடுபோய் உள்ளது. ஆனால் திருடு போன 10 நாட்களில் சிலை மீண்டும் கிடைத்துள்ளது. சிலையுடன் ஒரு கடிதமும் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தை சிலையை திருடி சென்ற நபர் தான் எழுதியிருந்தார்.

கடிதத்தில் சிலையை திருடிய நாள் முதல் தனக்கு பயங்கரமான கெட்ட கனவுகள் வந்ததாகவும் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் அந்த திருடன் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தான். சிலையை திருடியதற்கு தான் தண்டனை அனுபவித்ததாக உணர்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.