“நான் பெயிலாகிட்டேன்” மாணவனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள பெரும்பாக்கத்தில் செல்வி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த முகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் முகேஷ் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *