10 வரிவருவாய் குறைவு ”ஜிஎஸ்டியை பரிசோதிக்க தவறியதே காரணம்” சிஏஜி அறிக்கையில் தகவல்…!!

ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அரசு பரிசோதித்துப் பார்க்க தவறியதால் வரி வருவாய் குறைந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் தலைமைத் தணிக்கையாளர் மகரிஷியின் தன்னுடைய முதல் சிஏஜி அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு அம்சங்களை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும்  ஜிஎஸ்டி வரி விதிப்பின் ரசிது  சரி பார்க்கும் முறை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் அமுல்படுத்தப்படவில்லை. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பான படிவங்கள் தாக்கல் செய்யப்படுவது முழுமையாக இல்லை .அது  மாதம் தோறும் குறைந்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் ,  மாநில அரசுடன் வருவாய் பகிர்வுக்கான விதிமுறையை அரசு பின்பற்ற தவறிவிட்டது. 2017 2018 ஆம் ஆண்டு GST  தொகையின் பகிர்வு ஆணையத்தின் விதிகளின்படி பகிரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதியை மீறும் விதமாக இது அமைந்துள்ளது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு மறைமுக வரிகள் வளர்ச்சி வீதம் குறைந்துள்ளதாகவும் , 2016-2017_ஆம் ஆண்டு 21.33 ஆக இருந்த மறைமுக வரிகளின் வளர்ச்சி 2018-2019_ஆம் ஆண்டு 5.8 ஆக குறைந்துள்ளது. ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்கு வரும் வருவாயில் 10 % குறைந்தது இதற்கு GST வரியை மத்திய அரசு அமல்படுத்த வதற்கு முன்பு சரியாக சோதனை செய்த காரணத்தால் இந்த காலாண்டில் அரசுக்கு GST மூலம் வரும் வருவாய் 10% குறைந்துள்ளது என்று சிஏஜி அறிக்கையில் கூறப்படு இருந்தது.