10 இடங்களில் சதம் அடித்த வெப்பம்….. தாக்குப்பிடிக்குமா தமிழகம்…..!!

தமிழகத்தில் 11 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெட்பநிலை இருந்ததாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பைவிட அதிகமாக வெப்பநிலை இருக்கும் என்றும் , வெட்பத்தின் அளவு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.இந்நிலையில் இன்று தமிழகத்தில் 11 இடங்களில் 100 டிகிரி வெட்பநிலை இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகம் க்கான பட முடிவு

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , இன்று  தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது . சுமார் 100 டிகிரியை தாண்டிய வெட்ப தாக்கத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டுள்ளனர்.மேலும் திருத்தணி, கரூர், பரமத்தியில் ஆகிய பகுதியில் சுமார்  107டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவகித்துள்ளது என்றும் ,  வேலூர் – 106 , திருச்சி – 105 , தருமபுரி, சேலம் – 104 , சென்னையில் மீனம்பாக்கத்தில் 102, நுங்கம்பாக்கத்தில் 92டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.