புதுக்கோட்டையில் 10 பேருக்கு கொரோனா இல்லை ..!!

டெல்லி சென்று திரும்பிய புதுக்கோட்டையை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 பேர் குணமைடைந்த நிலையில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57 அதிகரித்து அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இதில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றார். தொடர்பு கொள்ள முடியாதவர்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

coronavirus live updates: கொரோனா வைரஸ் ...

இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு புதுக்கோட்டை திரும்பிய 10 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 10 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

கொரோனா இல்லை என்றாலும் 28 நாட்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் 10 பேரும் தனிமைப்படுத்தப்படுவர். 10பேரின் வீடுகளைச் சுற்றியுள்ள மக்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *