நள்ளிரவில் புகுந்த மர்ம விலங்கு…. 10 ஆடுகள் குடல் சரிந்த நிலையில் இறப்பு…. பீதியில் பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியபுதூர் கணபதி நகரில் விவசாயியான நஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 6 மாடுகள், 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாட்டு தொழுவத்தில் மர்மமான முறையில் 10 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு நஞ்சப்பன் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அழகாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு நேரத்தில் மர்ம விலங்கு ஆடுகளை கடித்து ரத்தத்தை குடித்து சென்றதா என்ற சந்தேகம் எழுந்தது. இதேபோல் அந்த பகுதியில் மர்மமான முறையில் மாடுகளும் உயிரிழந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply