10% இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்…. பேரவையில் முதல்வர் பேச்சு ..!!

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று சட்ட பேரவையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின்  நீட் தேர்வில்  சமூக நீதியை பறிகொடுத்து விட்டோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசின்  நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது இது குறித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகின்றோம். தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும். 10 சதவீத இட ஒதுக்கீட்டில் அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டும். இது குறித்து விரைவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் கூட்டம் நடத்தப்படுமென்று முதல்வர் பேரவையில் தெரிவித்தார்.