கனமழை எதிரொலி “10 விமானம் இரத்து” 54 விமானம் திருப்பிவிடப்பட்டது..!!

மும்பையில்  தொடரும் கனமழை காரணமாக 54 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகின்றது. தெருக்களிலும் , சாலைகளிலும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மும்பை மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது. மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மும்பை கனமழை குறித்து வானிலை ஆய்வு மையமும் இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Image result for விமானம் மழை

மக்களின் இயல்பு வாழ்கை முடங்கும் அளவிற்கான தொடர்மழை காரணமாக அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் ,  மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை மூடப்பட்டது. அங்கிருந்து செல்லும் 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் மும்பை வரவிருந்த 10 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.