மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு ஏதுவாக ஹால் டிக்கெட் வழங்கக்கூடிய பணியை துரிதப்படுத்த தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 2022-23 பொதுத் தேர்வு கால அட்டவணை கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதவுள்ளனர். இதற்கான இறுதி ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.