10 மற்றும் 20 ரூபாயை எடுக்க சென்ற சப் – இன்ஸ்பெக்டர்… திடீரென நடந்த சம்பவம்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் வாலிபர் ஒருவர் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி நகரில்  ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான  கருணாகரபாண்டியன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருவேற்காட்டில் உள்ள வங்கிக்கு சென்று 1 லட்ச்சம்  ரூபாய்  பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அதன் பின்  வெளியே  நின்றுகொண்டிருந்த சைக்கிளில் பணப்பையை வைத்துள்ளார்.

இந்நிலையில்  கீழே கிடந்த  10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை கருணாகரபாண்டியன் எடுத்துள்ளார். அதன்பின் மோட்டார்  சைக்கிளில் இருந்தபணப்பை    காணாமல் போனதை கண்டு கருணாகரபாண்டியன்   அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கருணாகரபாண்டியன்  திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *