விழா நடக்கும் தொகுதி வாரியாக மாணவர்களுக்கு ஊக்கத் இடத்துக்கு வருகை தந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து வரவேற்பு அளித்தனர். அவர் வீட்டில் இருந்து புறப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் வெள்ளம் அவரை திக்குமுக்காட வைத்துவிட்டது. காரில் இருந்து இறங்கி விழா மேடைக்கு வருவதற்குள் ரசிகர்கள் படை அவரை திணறடித்துவிட்டனர்.

234 தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நடிகர் விஜய் நேற்று கல்வி உதவித் தொகை, சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.  இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சோர்ந்து போய் மேஜையில் கைவைத்தபடி நின்றிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் விஜய் குறித்து உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.