10 நிறங்களில் வெளியாகும் ஓலா மின்சார ஸ்கூட்டர்… வெளியான புதிய அப்டேட்… உடனே புக் பண்ணுங்க…!!!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது.

பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு தாறுமாறாக ஏறி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஓலா நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையை அமைத்து உற்பத்தி செய்து வருகிறது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கி 24 மணி நேரத்திற்குள் ஒரு லட்சம் பேர் இந்த ஸ்கூட்டரை புக்கிங் செய்து உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் 499 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த ஸ்கூட்டரால் ஒரே சார்ஜிங்கில் 100 முதல் 150 கிலோமீட்டர் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதன் புதிய அப்டேட் ஆக ஆகஸ்ட் மாதம் இந்த ஸ்கூட்டர்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் தற்போது பத்து நிறங்களில் வெளியாகியுள்ளது. இதற்கான முன்பதிவு சென்றவாரம் துவங்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 20 லட்சம் ஓலா ஸ்கூட்டர்களும், அடுத்த ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 1 கோடி ஸ்கூட்டர்களும் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ஓலா நிறுவனம் களமிறங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *