உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவருக்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர் இன்னும் 10 நாட்களில் முதல்வர் பதவியில் இருந்து விலகாவிடில் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டது போன்று கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் வந்துள்ளது.

அதாவது மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அடையாளம் காணப்படாத போன் நம்பர்களிலிருந்து இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.

இந்நிலையில் தற்போது அவரைப் போன்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மெசேஜ் அனுப்பியது தானே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் என்பது தெரியவந்த நிலையில் அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்ததோடு உத்திரபிரதேச மாநில முதல்வருக்கும் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.