அரபி கடலில் உருவாகி, அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் “பிபா்ஜாய்” 15ஆம் தேதி தான் கரையை கடக்கும் என்பதால் இந்தியாவில் கடந்த வருடங்களில் புயல் உருவாகி கிட்டத்தட்ட 10 நாட்கள் கடலில் நீடித்த புயல் சின்னம் எனும் பெயரை இது பெறுகிறது. அரபி கடலில் ஜூன் 6-ம் தேதி உருவாகிய பிபர்ஜாய் வருகிற 15-ஆம் தேதி சௌராஷ்டிரம்-கட்ச் வளைகுடா பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

உலக வெப்பமயமாதல் காரணமாக அரபி கடலில் புயல் உருவாவது அதிகரிக்கும் எனவும் அது அதி தீவிர புயலாக மாறுவதும் அதிகரிக்கும் எனவும் ஆய்வுகள் கூறுகிறது. மேலும் புயல்கள் அதிக நாட்கள் கடலில் நீடித்து, இதனால் அதன் தீவிரம் அதிகரிக்கும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகிறது. கட்ச் வளைகுடா கடற்கரை பகுதியிலுள்ள ஜாம்நகா், மோா்பி, கிா் சோம்நாத், போா்பந்தா், தேவபூமி துவாரகா போன்ற 6 மாவட்டங்களும் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.