10 நாட்களுக்கு பிறகு…. கொரோனாவை வென்ற பச்சிளம் குழந்தை…. நம்பிக்கையூட்டும் செய்தி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் புவனேஸ்வரை சேர்ந்த பச்சிளம் குழந்தை குடியா. இந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளது. இந்நிலையில் பத்து நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு தொற்று பாதிப்பிலிருந்து மீண்டும் குழந்தை வீடு திரும்பியுள்ளது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *