10 கோடி மக்களுக்கு தடுப்பூசி…. மே மதத்திற்குள் நடக்கணும்…. ஜோ பைடன் உறுதி…!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற மே மாதத்திற்க்குள் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தடுப்பூசி போட தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கு வருகின்ற மே மாதத்திற்குள் தடுப்பு ஊசி கிடைக்கும் வகையில் வழி செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் பள்ளிகளை விரைவில் திறப்பதற்கான நோக்கில் கல்வியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸாவது தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகக்குழு தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சைபர் மற்றும் மாடர்னா என்ற இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளை வாங்கி மக்களுக்கு செலுத்தி வரும் நிலையில் மூன்றாவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியும் வாங்குவதாக கையொப்பமிட்டுள்ளது. ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று தனது முதல் இலக்காக 100 நாட்களுக்குள் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இதற்குண்டான பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கூறினார். இந்நிலையில் வருகின்ற மே மாதத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *