10 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 23ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

தற்போது மார்ச் 31ஆம் தேதி வரை இந்த தேர்வை நீட்டித்து தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.