தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய பல வசதிகளை வழங்கி வருகிறது. அதில் முக்கியமானது ஒன்றுதான் தேசிய ஓய்வூதிய திட்டம். இந்த பென்ஷன் மூலமாக ஊழியர்களுக்கும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் epfo நிதி பாதுகாப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பணியாளர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயன் பெறுகிறார்கள்.

EPF  உறுப்பினர் இறந்து விட்டால் அவருடைய மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகள் ஓய்வூதியத்தின் பலனை பெற முடியும்.  இதுவே குடும்ப ஓய்வூதியம் என்று அழைக்கப்படுகிறது. EPF உறுப்பினர் இறந்த பிறகு அவருடைய மனைவிக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும். பணியாளருக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு 25 வயது வரை ஓய்வுதியும் கிடைக்கும். ஒருவேளை நாமினி இல்லை என்றால் பணியாளரின் பெற்றோருக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வுதியம் பெறுவதற்கு எந்த ஒரு பணியாளரும் பத்து வருடங்கள் ஒரே வேலையில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.